பாலியல் வன்கொடுமையை கண்டித்து விருதுநகரில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பல்வேறு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் செல்வ குமார் தலைமை வகித்தார். இதில் அக்கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், இந்திய தேசிய மாதர் சம்மேளனம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் லிங்கம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டு பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி நாம் தமிழர் மகளிர் பாசறை சார்பாக விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்