ராமநாதபுரம்: திருவாடானை அருகே சத்துணவு சாப்பிட்ட 36 மாணவ, மாணவி களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கவலை வென்றான் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 87 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியில் மாணவ, மாணவிகள் நேற்று பிற்பகல் சத்துணவு சாப்பிட்டுள்ளனர்.
இதில் சில மாணவிகளுக்கு தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 22 மாணவிகள், 14 மாணவர்கள் என மொத்தம் 36 பேருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.பாலுமுத்து, திரு வாடானை வட்டாட்சியர் செந்தில் வேல்முருகன், டிஎஸ்பி ஜான் பிரிட்டோ ஆகியோர் பாதிக்கப் பட்ட மாணவ, மாணவிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
சத்துணவில் பல்லி விழுந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுகாதாரத் துறையினர் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago