நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த வண்டல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 35 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளிக்கு நிரந்தரமாக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அந்த ஆசிரியரும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பள்ளிக்கு வருவதில்லை. இதனால், தற்காலிகமாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு, அவரும் பள்ளிக்கு சரியாக வருவதில்லை. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆசிரியரை நியமிக்காத மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து, முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியன் தலைமையில், அதிமுக நகரச் செயலாளர் தங்க.கதிரவன் மற்றும் கட்சியினர் நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை.
இதையடுத்து, ஒரு மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.எஸ்.மணியன் பின்னர் கூறியது: இப்பள்ளியில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். பணிமாற்றம் செய்ய அதிகாரம் இருந்தும் முதன்மைக் கல்வி அலுவலர் மறுத்து வருகிறார். இதே நிலை நீடித்தால் அரசுப் பள்ளியை இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago