தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு, சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு 44 நாட்கள் உள்ள நிலையில், புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை தமாகாவினர் தொடங்கியுள்ளனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் மேயரும் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவருமான சாருபாலா தொண்டைமான், கட்சியின் தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்தினார். தென்னந்தோப்பு அச்சிடப்பட்ட போஸ்டர் மட்டுமின்றி, 4 தென்னங்கன்றுகளை கைகளில் ஏந்தியபடி தமாகாவினர் போஸ் கொடுத்தனர். பின்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதை பார்த்துக்கொண்டிருந்த அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள், போலீஸார் உள்ளிட்டோர் தமாகாவுக்கு ஒதுக்கியது தென்னந்தோப்பா தென்னங்கன்று சின்னமா என குழப்பம் அடைந்தனர்.
பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு அவர்கள் சென்ற பின்னர், தமாகா மாநிலச் செயலாளர் எம்.டி.ராஜராஜசோழன் தலைமையில் சிலர் வந்து கட்சியின் சின்னத்தை அறிமுகப்படுத்தினர்.
தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது உறுதியாகாத நிலையில், தனித்தனியாக நடத்திய இந்த நிகழ்ச்சி திருச்சி தமாகாவில் நிலவும் கோஷ்டி பூசலை வெளிப்படுத்தியுள்ளதாக தொண்டர்கள் கூறிக்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago