அரசுப் பேருந்துகள் செல்லும் பயணவழி உணவகங்களுக்கான நிபந்தனைகள் என்னென்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பேருந்துகள் இனி பயண வழியில் உள்ள அரசு லைசன்ஸ் பெற்ற சைவ உணவகங்களில் மட்டுமே நின்று செல்லலாம் என்று போக்குவரத்து கழகம் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்த நிபந்தனையை நீக்கியிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, பயணவழி உணவகங்களுக்கான டெண்டரில் இனி சைவ உணவகங்கள் மட்டுமே பங்குபெற முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அசைவ உணவக உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று வெளியான டெண்டரில் இருந்த 'சைவ உணவு' என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், டெண்டரில் பங்குபெற உணவகங்களில் சிசிடிவி கேமரா வசதி இருக்க வேண்டும், சுத்தமான சமையலறை இருக்க வேண்டும், கணினி பில்லிங் வசதி இருக்க வேண்டும், சுத்தமான கழிவறைகள் இருக்க வேண்டும், விலை சரியானதாக இருக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் விதித்துள்ளது.

நிபந்தனைகள் முழுவிவரம்: * உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். உணவகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும்படி பராமரிக்க வேண்டும்.

* பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும்.

* உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். மேலும் பயணிகளுக்கு கழிவறையில் தண்ணீர் வசதி எப்பொழுதும் இருக்க வேண்டும். கழிவறையை கம்ப்ரஷர் மூலம் தான் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், பயோ கழிவறை இருக்க வேண்டும்.

* உணவகத்தின் அமைப்பு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் நின்று செல்வதற்கு போதுமான இடவசதியுடன் இருக்க வேண்டும். மேலும், பேருந்து நிறுத்தம் செய்யும் இடம் கான்க்ரீட் தளமாக அல்லது பேவர் பிளாக் போட்டிருக்க வேண்டும்.

புகாரும், நடவடிக்கையும்: நெடுஞ்சாலைகளில் இருக்கும் சில தனியார் உணவகங்களில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பதாக பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர். அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவின்பேரில், பொது மக்களின் புகார்களை ஒட்டி பயணவழி உணவகங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் பல உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அரசுப் பேருந்துகள் இனி லைசன்ஸ் பெற்ற சைவ உணவகங்களில் மட்டுமே நின்று செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

கண்காணிப்பு எளிது.. நேற்று மாலை வெளியான புதிய டெண்டர் ஒப்பந்தம் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதற்குப் பரவலாக எதிர்ப்பும் கிளம்பியது. இருப்பினும் அதிகாரிகளோ இதற்கு முன்னால் புகார் வந்த பல்வேறு உணவகங்களும் அசைவ உணவகங்கள் என்பதாலும், அசைவ உணவுகள் இல்லாவிட்டால் பயணவழிப் பாதை உணவகங்களின் தரத்தை கண்காணிப்பது எளிது என்றும் தெரிவித்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்