தமிழகத்தில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளது. இதுதொடர்பாக ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் மார்ச் 25-ம்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

வரும் 26, 27, 28-ம் தேதிகளில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில்ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 24 (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 8 செ.மீ., விருதுநகர் மாவட்டம் பிளவக்கல், ராஜபாளையத்தில் தலா 6 செ.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூர், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்