திருச்சி உச்சிப்பிள்ளையார், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோயில்களுக்கு ரோப்கார்: பி.கே.சேகர்பாபு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது எம்எல்ஏ-க்கள் கோவை வடக்கு கே.அர்ச்சுனன், அணைகட்டு நந்தகுமார், காட்டுமன்னார்கோயில் சிந்தனைச்செல் வன், திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ், போளூர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பழனி ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் தொகுதிசார்ந்த கேள்விகளை எழுப்பினர்.

இவற்றுக்குப் பதில் அளித்துஅறநிலையத் துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு பேசியதாவது:

மருதமலை கோயிலுக்கு கம்பிவட ஊர்தி இல்லை என்றதும், ரோப்கார் வசதி கேட்கின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கள ஆய்வு மேறகொண்டு, 20.4 மீட்டர் கொண்ட 100 படிகளை ஏறுவது சிரமமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, உரிய தீர்வுகாண 11 பேர் கொண்ட வல்லுநர்குழு அமைக்கப்பட்டது. சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, ரூ.3.36லட்சத்தில் மின் தூக்கி அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இது திறந்துவைக்கப்படும்.

தமிழகத்தில் 754 கோயில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. அருகில் உள்ள அதிக நிதி வரும் கோயில்களில் இருந்து பள்ளிகொண்டா கோயிலில் அன்னதானத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்படும்.

மத்திய அரசின் போக் என்ற உணவு தர சான்றிதழ் தற்போது 341 கோயில்களுக்குப் பெறப்பட்டுள்ளது.

காட்டுமன்னார் கோயில் திருப்பணியில் ஜரிபந்தனம் கோரிக்கை தொடர்பாக திட்ட அனுமதி அளிக்கப்பட்டு, ஆணையர் அனுமதியுடன் நிறைவேற்றப்படும்.

சட்டப்பேரவைத் தேர்தல்அறிக்கையில் 5 மலைக்கோயில் களில் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டு, தற்போது திருச்சி உச்சிப்பிள்ளையார், திருக்கழுக்குன்றம், திருநீர்மலை கோயில்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரோப்கார் வசதி செய்துதரப்படும்.

போளூர் நரசிம்மர் கோயிலுக்கு சாலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். ரூ.70 கோடியில் பழனியில் 2-வது ரோப்கார் அமைக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் கோரப்பட்டது. 2016-ல் ஒப்பந்தம் விடப்பட்டாலும், கடந்த ஆண்டு வரை பணி தொடங்கப்படவில்லை. தற்போது பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன. 18 மாதங்களில் பணிகளை முடிப்பதாக ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்