கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5, 6-வது அணு உலைகள் கட்டுமானப் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமானப்பணி நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங், "கர்நாடகாவின் கைகா, ஹரியாணாவின் கோரக்பூர், மத்தியப் பிரதேசத்தின் சுத்கா ஆகிய இடங்களில் தலா 700 மெகாவாட் திறன் கொண்ட தலா 2 அணு உலைகளும், ராஜஸ்தானின் மஹி பன்ஸ்வாராவில் தலா 700 மெகாவாட் திறன் கொண்ட 4 அணு உலைகள் அமைப்பதற்கான முன்-திட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது.

இந்தத் திட்ட பணிகள் அனைத்தும் நிறைவடையும் போது, நாட்டில் கூடுதலாக 9,000 மெகாவாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE