கரூர் | முடி திருத்தம் செய்ய அறிவுறுத்திய ஆசிரியரை மிரட்டிய பள்ளி மாணவர்கள் மூவர் மீது போலீஸில் புகார்

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: முடி திருத்தம் செய்ய அறிவுறுத்திய ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த மூன்று மாணவர்கள் மீது கரூர் போலீஸிடம் ஆசிரியர்கள் புகார் அளித்தனர். மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் தோகைமலையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அருகேயுள்ள வருந்திப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் படித்து வருகின்றனர். அவர்கள் ஓழுங்காக முடி திருத்தம் செய்துகொள்ளாமல் பள்ளிக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், அந்த மாணவர்களை கண்டித்துள்ளார். முடி திருத்தம் செய்யும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் 3 பேரும் இன்று காலை பள்ளிக்கு தங்கள் ஊரைச் சேர்ந்த 4 பேரை அழைத்து வந்து ஆசிரியரை மிரட்டியுள்ளனர்.

இதனால், அச்சமடைந்த ஆசிரியர்கள் பள்ளியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, பள்ளி நுழைவாயில் பகுதியில் ஒன்று திரண்டனர். இதையடுத்து, தோகைமலை காவல் நிலையத்தில் அனைத்து ஆசிரியர்கள் சார்பாக பள்ளியில் படிக்கும் குறிப்பிட்ட 3 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த மாணவர்களுடன், அவர்களுடைய பெற்றோர்களையும் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்