சென்னை: தமிழகத்தில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: அரசின் சேவைகள் உரிய காலத்துக்குள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும், சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 21 மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இச்சட்டத்தின்கீழ் சுமார் 150 சேவைகளை உரிய காலத்துக்குள் பெற முடியும்.
உதாரணமாக, ஹரியாணாவில் 15 நாட்களில் ரேஷன் கார்டு, 8 நாட்களில் மின் இணைப்பு, 7 நாட்களில்சாதிச் சான்று, 12 நாட்களில் குடிநீர் இணைப்பு என கால வரம்புநிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுந்த காரணமின்றி இந்த சேவைகள் தாமதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம்செய்து மனுதாரருக்கு நஷ்ட ஈடாகவழங்குவதையும் இச்சட்டம் உறுதிசெய்கிறது. தேவையற்ற காத்திருப்பு, லஞ்சத்தை ஒழிக்க இச்சட்டம்உதவும். இவ்வாறு ட்விட்டரில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago