பரோலில் உள்ள நளினிக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தைதான் அணுக வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது பரோலில் உள்ள நளினிக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தைத்தான் அணுகவேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திகொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை சார்பாக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போது பரோலில் உள்ள நளினி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘எங்கள் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய மறுநாளில் இருந்துவிடுவித்து இருக்க வேண்டும். எனவே, ஆளுநரின் உத்தரவுக்காக காத்திருக்காமல் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும். அல்லது இதுகுறித்து முடிவு எடுக்கும் வரை எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பதாகக் கூறி அதற்கான உத்தரவு நகலை சமர்ப் பித்தார்.

நளினி தரப்பில் வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில் நளினிக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, ‘‘குற்ற விசாரணைமுறை சட்டத்தின்படி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரலாம். கைது செய்யப்பட்டிருந்தால் ஜாமீன் கோரலாம். தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அதை நிறுத்தி வைக்கக் கோரலாம். எந்தவொரு மேல்முறையீட்டு வழக்கும் நிலுவையில் இல்லாமல் நேரடியாக எவ்வாறு ஜாமீன் கோர முடியும்’’ என கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘‘உச்ச நீதிமன்றம்தான் அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்க இயலாது என்பதால் மனுதாரர் உச்சநீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும். அதுபோல உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டுமே சட்டமாகி விடாது’’ என தெரிவித்தார். வழக்குவிசாரணை நாளைக்கு (மார்ச் 24) தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்