தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) குமரகுருபரன், தலைமை தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 16-ல் நடைபெறவிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரச்சாரங்களை துரிதப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் நடத்தப்படும் தொலைக்காட்சிகளில் தேர்தல் பிரச்சாரங்கள் ஒளிபரப்பாகும்போது அரசு கேபிள் டிவி ஒளிபரப்புக்கு இடையூறு செய்வதாக பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்தன. தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு அரசியல் கட்சிகளும் புகார்கள் அளித்தன.
இதுதவிர, அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்போது, அரசு கேபிள் டிவி மீது புகார் கூறப்பட்டது. நசீம் ஜைதியும் புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிச் சென்றார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குநர் குமரகுருபரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
7 hours ago