75 சதவீத மானியத்தில் ரூ.1.5 கோடியில் கால்நடை மற்றும் கன்றுக ளுக்கு தீவனம் தரும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அப்போது முதல்வரிடம் பல்வேறு புகார்களை பெண்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை மூலம் 75 சதவீத மானியத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியா ளர் சங்கத்தில் உறுப்பினர் அல் லாத கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கால்நடை தீவனம் மற்றும் கன்று தீவனம் நடப்பாண் டிற்கு வழங்கும் திட்ட தொடக்க விழா சண்முகாபுரத்தில் நேற்று நடந்தது. கால்நடை நலத்துறை இயக்குநர் செல்வராஜ் வரவேற்றார். அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமைதாங்கினார். அரசு கொறடா ஆறு முகம், ரமேஷ் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு கால் நடை விவசாயிகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த காலத்தில் மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. முதல்வர் ரங்கசாமி முயற்சியால் 75 சதவீத மானியத்தில் கால்நடை மற்றும் கன்று தீவனம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாதந்தோறும் மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்கப்படும். இந்த தீவனத்தை சோதனை செய்த பிறகே கொள்முதல் செய்கிறோம். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை.
இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் இரு மாதங்களுக்கு ரூ.1 கோடியே 27 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் 615 டன் கால்நடை தீவனம் 4,100 கால்நடைகளுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும், ரூ.22 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பில் 104.40 டன் கன்று தீவனம் 696 கன்றுகளுக்கு வழங் கப்படவுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் கால்நடை தீவனம் வழங்கப்படும். கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தீவனம் தரப்படும். கால் நடைகளுக்கான மருந்துகளை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் மருந்து வந்து விடும். டாக்டர்களும் பணியில் இருப்பார்கள். மானிய தீவனம் வழங்குவது நிறுத்தப்படாது” என்றுகுறிப்பிட்டார்.
‘கால்நடை மருத்துவமனையில் மருந்துகள் இல்லை'
இந்நிகழ்வில் பங்கேற்ற முதல்வரிடம் கால்நடை வளர்க்கும் பெண்கள், “கடந்த காலங்களில் மானிய விலையில் தீவனம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு சில மாதங்களிலேயே நிறுத்திவிட்டனர்.
தற்போது தீவனங்களின் விலை உயர்ந்துவிட்டதால் மானிய விலையில் மாதந்தோறும் தீவனம் வழங்க வேண்டும். மேலும், ஒரு மாடு வைத்திருப்போருக்கும், 10 மாடு வைத்திருப்போருக்கும் தலா ஒன்றரை மூட்டை தீவனம் வழங்கப்படுகிறது.இது போதாது. நிறைய மாடுகள் வைத்திருப் போருக்கு கூடுதலாக தீவனம் வழங்க வேண்டும். கால்நடை மருத்துவமனைகளில் டாக்டர்கள், தேவையான மருந்துகள் இருப்பதில்லை” என்றனர்.
அதற்கு முதல்வர் ரங்கசாமி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago