மதுரையில் இருந்து காசிக்கு சுற்றுலா சிறப்பு ரயில்

By செய்திப்பிரிவு

மதுரைக் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மதுரையிலிருந்து காசிக்கு சுற்றுலா ரயிலை இயக்குகிறது. ஏப்ரல் 28-ம் தேதி அதிகாலை மதுரையிலிருந்து புறப்படுகிறது. தமிழ் புத்தாண்டில் வரும் முதல் அமாவாசை தினத்தில் கயாவில் முன்னோர்களுக்கு சிறப்பு தர்ப்பணம் செய்யவும், காசியில் கங்கா ஸ்நானம் செய்யவும், அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, அட்சய திரிதியை அன்று ஹரித்வாரில் கங்கையில் நீராடி ஆக்ரா தாஜ்மஹால், மதுரா கிருஷ்ண ஜென்மபூமி, டெல்லி நகர் ஆகியவற்றை சுற்றிப் பார்த்து திரும்பலாம்.  ராமானுஜர் சமத்துவ சிலையையும் தரிசிக்க பயணத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப் படுகின்றன. சுற்றுலாத் தலங்களில் குளிர் சாதன அறைகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 11 நாள் சுற்றுலாவுக்கு வசதிக்கேற்பே ரூ.19,900, 26,500 மற்றும் ரூ.36,900 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் பயணக்கட்டணம், சைவ உணவுடன் தங்கும் வசதி, உள்ளூர் பேருந்து கட்டணம் ஆகியவையும் அடங்கும். இந்த சுற்றுலாவுக்கு மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்.டி.சி. வசதியையும் பயன் படுத்திக்கொள்ளலாம். மேலும் விவரம் அறிய 9003140714, 8287932122 ஆகிய தொலைபேசி எண்களிலோ, www.irctctourism.com என்ற இணையதளத்திலோ முன்பதிவு செய்யலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்