அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரும் செல்போன் அழைப்புகள் மற்றும் நம்பகமற்ற ஆன்-லைன் அப்ளிகேஷன்களின் லிங்க், கடன் அளிப்பதாக வரும் குறுந்தகவலை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் அழைப்புகள் மற்றும் நம்பகமற்ற ஆன்-லைன் அப்ளிகேஷன்களின் லிங்க், கடன் அளிப்பதாக வரும் குறுந்தகவல் உள்ளிட்டவைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். மேலும், அறிமுகம் இல்லாதவர்கள் மற்றும் நிறுவனங்கள், வாட்ஸ்அப், முகநூலில் உங்கள் வங்கிக் கணக்கு எண்கள் விவரங்கள் தொடர்பான விவரங்களை பகிரக்கூடாது. ஒரு வேளை மோசடி நபர்களிடம் பணம் இழந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் பிரிவுக்கு புகார் அளிக்கலாம்.
மேலும், www.cybercrime.govi.this என்ற இணையதளத்தில் புகார் அளித்தால் இழந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க முடியும். பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், வேலை தேடிக் கொண்டிருப்போர் இதுபோன்ற மோசடி கும்பல் வலையில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago