மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பாக ஒருநாள் சத்தியாகிரகப் போராட்டம் நடத்த அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய மக்கள்சக்தி கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ மகாத்மா காந்தியின் மதச்சார்பற்ற கொள்கையை வலியுறுத்தும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையின்முன்பாக ஒருநாள் சத்தியாகிரகப்போராட்டம் நடத்த அனுமதி கோரிபோலீஸ் அதிகாரிகளிடம் மனு அளித்தேன்.
ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட சட்டம் -ஒழுங்கு பிரச்சினை காரணமாக கடற்கரை சாலையில் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சத்தியாகிரகப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டனர். காந்தி சிலை அருகில் பல்வேறுஅரசு நிகழ்ச்சிகள் நடைபெறும்போது அறவழியில் நடத்தப்படும் சத்தியாகிரகப் போராட்டத்துக்கு மட்டும் அனுமதி மறுப்பதுஎன்பது ஏற்புடையதல்ல. எனவே சத்தியாகிரகப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, இதுதொடர்பாக தமிழக அரசும், சம்பந்தப்பட்ட போலீஸாரும் இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுஉள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago