திண்டிவனம் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஜப்தி செய்யப்படுகிறது. 
தமிழகம்

நகராட்சிக்கு வரி பாக்கி: திண்டிவனம் பிஎஸ்என்எல் அலுவலகம் ஜப்தி

செய்திப்பிரிவு

திண்டிவனம் ரயில்வே நிலையத் தையொட்டி பிஎஸ்என்எல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம், கடந்த 2013-ம் ஆண்டுமுதல் 2022-ம் ஆண்டு வரை 9 வருடங்களாக திண்டிவனம் நகராட்சிக்கு வரி செலுத்தாமல் 15 லட்சத்து 94 ஆயிரத்து 436 ரூபாய் பாக்கி உள்ளது.

இது குறித்து நோட்டீஸ் மற்றும் தகவல் தெரிவித்தும் வரி பாக்கியை செலுத்தவில்லை. இதுகுறித்து பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நகராட்சி ஆணையர் சுந்தரராஜன் தலைமையில் தண்டோரா போடப்பட்டது. பின்னர் நேற்று பிற்பகல் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்த சேர்கள், டேபிள்கள் மற்றும் பொருட்களை நகராட்சி ஊழியர்கள் ஜப்தி செய்து நகராட்சிக்கு எடுத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT