ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற பங்குனி தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர்த் திருவிழா இந்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த விழாவில் சிறப்பு உற்சவங்களாக 13-ம் தேதி தங்க கருட வாகன வீதியுலா, 17-ம் தேதி தங்கக் குதிரை வாகன வீதியுலா ஆகியவை நடைபெற்றன. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முற்பகல் 11.45 மணிக்கு நம்பெருமாள் சேர்த்தி மண்டபத்திலிருந்து பங்குனி தேர் மண்டபத்துக்கு புறப்பட்டு, பகல் 12 மணிக்கு தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று, 12.45 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பி தேர் வடம் பிடித்தனர்.
தேர் கீழ சித்திரை வீதியிலிருந்து புறப்பட்டு, தெற்கு, மேற்கு, வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து மாலை 4.15 மணிக்கு நிலையை அடைந்தது.
பின்னர், பக்தர்கள் தேரின் முன்பு தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றியும் வழிபட்டனர். இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கொடி இறக்கப்பட்டது. இவ்விழாவின் நிறைவாக இன்று இரவு ஆளும்பல்லக்கு நடைபெறவுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, கோயில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
படவிளக்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற பங்குனி தேர் திருவிழாவில் வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்.
படம்: ஜி.ஞானவேல்முருகன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago