நிதிநிலை அறிக்கையில் தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்த அறிவிப்பு இல்லாதது கரும்பு விவசாயிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது என தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்க தமிழக தலைவர் கே.வி.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் பொது நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து 2-வது முறையாக வேளாண் தனி நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நேற்று தாக்கல் செய் துள்ளார். தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை, ரூ.7 ஆயிரம் கோடியாக குறைய உள்ளது மகிழ்ச்சி. 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை குறைகின்றது. இது, நிதி நிர்வாகத்தில் அரசு மேற்கொண்ட முயற்சியால் வருவாய் பற்றாக்குறை குறைந் திருப்பது நல்ல முன்னேற்றம். தமிழகத்தின் வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கை.
இதேபோல், விவசாயத்தை நவீன மயமாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும், கரும்பு கொள்முதல் விலை ஒரு டன்னுக்கு ரூ.2,950 வழங்கப்படும், கரும்பு சாகுபடிக்கு உதவியாக ரூ.10 கோடியில் உபகரணம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை ஆலைகளில் ஆய்வகத்தை நவீனமய மாக்குவது, தானியங்கி எடைகள் அமைக்க ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்கவும், விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது மகிழத்தக்கது.
அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்து வதற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. விளை நிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்துகள் தெளிக்க, கிராமத்தில் உள்ள நிலங்களுக்கு புவியிடக் குறியீடு, புதிய பயிர் திட்டத்துக்கான பரிந்துரை, பூச்சி மற்றும் நோய்களை தடுக்க செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் பயன்படுத்த பயிற்சி, மின் இணைப்பு வழங்கப்பட்ட தாட்கோ பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
இதுபோன்ற பல அம்சங்கள் நிறைந்து காணப்பட்டாலும் தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மீது நம்பிக்கை வைத்து எதிர்பார்ப்புடன் காத்திருந்த கரும்பு விவசாயிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர்.
இதேபோல், மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருந்த பெண்களும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்த அரசு பணியாளர்களுக்கு ஏமாற்றம் தருகிறது. இதன் மீது அரசாங்கம் தனிக் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும்” என தெரி வித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago