அதிமுகவுக்கு ஆதரவு அளித்த அமைப்புகளுக்கு தலா ரூ.1 லட்சம் பட்டுவாடா: ரூ.25 ஆயிரம் குறைவதாக புகார்

By குள.சண்முகசுந்தரம்

தேர்தலில் ஆதரவளித்த அமைப்புக ளுக்கு அதிமுக தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கியதாகவும் அதில் ரூ. 25 ஆயிரம் குறைவாக இருந்த தாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக் கிறது.

தேர்தலில் திமுக-வுக்கும் அதி முக-வுக்கும் நூற்றுக்கணக்கான அமைப்புகள் போட்டி போட்டுக் கொண்டு ஆதரவு தெரிவித்தன. இவற்றில், அதிமுக-வுக்கு ஆதர வளித்த அமைப்புகளுக்கும் கட்சிக ளுக்கும் நேற்று, அக்கட்சியின் தலைமையகத்தில் வைத்து தேர்தல் செலவுக்கு பணம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு அமைப்புக்கும் இரண்டு 500 ரூபாய் கட்டுகள் வீதம் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், அதில் ரூ.25 ஆயிரம் குறைவாக இருந்ததாக குற்றச் சாட்டு எழுந்திருக்கிறது.

இதுகுறித்து `தி இந்து’விடம் பேசிய உழவர் உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன், ``இயற்கை விவசாயத்தை மேம்படுத்த திட்டங்களை செயல்படுத்து வதாக உறுதி கொடுத்தால் நாங்கள் அதிமுக-வுக்கு ஆதரவு தெரிவிக்கி றோம் என்று போயஸ் கார்டனில் நாங்கள் கடிதம் கொடுத்திருந்தோம். அது தொடர்பாக எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாத நிலையில், நாங்கள் அதிமுக-வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக அவர்களே அறிவித்துக்கொண்டார்கள்.

இந்த நிலையில் வெள்ளிக் கிழமை அன்று அதிமுக தலை மை அலுவலகத்துக்கு லெட்டர் பேடு தாளுடன் வரச் சொன்னார் கள். `லெட்டர் பேடு எதற்கு?’ என்று கேட்டதுக்கு, உங்களுடைய கோரிக் கைகளை அம்மாவுக்குத் தெரிவிப் பதற்காக என்று சொன்னார்கள். என்னால் வரமுடியாது என்றதும் உங்களுடைய பிரதிநிதியை அனுப்பிவையுங்கள் என்றார்கள்.

அதன்படி எங்களுக்கு முன்பாக அதிமுக தலைமைக் கழகத்துக்கு போன சில அமைப்புகளுக்கு இரண்டு 500 ரூபாய் கட்டுகளை கொடுத்துவிட்டு, அவர்கள் கொண்டு போன லெட்டர் பேடு தாளில் வெறுமனே, ‘பெற்றுக் கொண்டேன்’ என்று மட்டும் எழுதி அமைப்புகளின் தலைவர் களிடம் கையெழுத்து வாங்கி இருக் கிறார்கள். அந்த 500 ரூபாய் கட்டு களை பிரித்து எண்ணிப் பார்த்த போது அதில் ரூ. 25 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்திருக்கிறது.

பணம் வாங்குவது எங்களது நோக்கம் இல்லை என்றாலும் உண்மையை தெரிந்து கொள்வதற்காக நானும் எனது பிரதிநிதியை அனுப்பி வைத்தேன். எனது பிரதிநிதியிடமும் அதேபோல் இரண்டு 500 ரூபாய் கட்டுகளை தந்துவிட்டு கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். அதிலும் 25 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்தது. இதில் ஏதோ தவறு நடப்பதாக தெரிந்ததால் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு நானே அதிமுக தலைமையகத்துக்குப் போனேன்.

அங்கிருந்த அலுவலர்களிடம், `உங்களிடம் நாங்கள் பணம் கேட்டோமா, எதற்காக எங்களை இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், விதண்டாவாதம் பண்ணாதீங்க.. பணம் வேண்டாம்னா குடுத்துட்டுப் போங்கன்னு சொன்னாங்க. அவங்கக்கிட்ட பணத்தை திருப்பிக் குடுத்துட்டு, எங்களோட லெட்டர் பேடு தாளை திருப்பிக் கேட்டேன். `அத மேல அனுப்பி வைச்சாச்சு’ன்னு சொல்லி, தர மறுத்துட்டாங்க.

500 ரூபாய் கட்டு ஒவ்வொன் றிலும் 50 ஆயிரம் ரூபாய் இருப்ப தாக மேல் பகுதியில் எழுதிருக்கு. ஆனா, 25 ஆயிரம் ரூபாய் கம்மியா இருக்கு. அங்க இருக்கவங்க முதல மைச்சருக்குத் தெரியாம ஏதோ தப்புப் பண்றாங்கன்னு தெரியுது.

அதேசமயம் அந்த 75 ஆயிரத்தையும் வாங்கிட்டுப் போறதுக்கு வரிசை கட்டி நின்னவங்க, ‘சத்தம் போட்டு காரியத்தை கெடுத்துடாதீங்க’ன்னு என்னைய கெஞ்சுனாங்க. தேர்தல் செலவுக்காக அம்மா குடுக்கச் சொன்னாங்கன்னுதான் இந்தத் தொகையை குடுத்துருக்காங்க. 75 ஆயிரம் ரூபாய்க்காகவா அமைப்புகளை அடமானம் வைப்பாங்க?’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்