கரூர்: கரூர் பசுபதீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டத்தை, வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தார் மேயர் கவிதா.
கரூர் மாவட்டம் அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 9-ம் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டத்தையொட்டி பசுபதீஸ்வரர், அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி உற்சவர் சிலைகளுக்கு இன்று (18-ம் தேதி) சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேருக்கு எழுந்தருள செய்யப்பட்டது. பங்குனி தேதோட்டத்தை கரூர் மாநகர மேயர் கவிதா கணேசன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். மாமன்ற உறுப்பினர் பாண்டியன் மற்றும் உள்ளாட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
» தமிழக பட்ஜெட் 2022-23: 'முதல்வரின் முகவரி' தொடங்கி தமிழ் வளர்ச்சி வரை - அறிய வேண்டிய 25 அம்சங்கள்
தேரோட்டத்தையொட்டி வடக்கு ரத வீதியில் இருந்த சென்டர் மீடியன்கள் அகற்றப்பட்டன. மின் கம்பிகள் தற்காலிகமாக அகற்றப்பட்டன. தேர் 4 வீதிகளை சுற்றி வலம் வந்தது. இதனிடையே, 19-ம் தேதி நாளை ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு அபிஷேகம், தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. மேலும், நாளை இரவு ரிஷப வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். 22ம் ஸ்ரீ சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகன திருவீதி உலாவுடன் பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago