திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நாங்கு நேரி நீதிமன்ற நீதித்துறை நடுவர் ராம்கிஷோர் நேற்று விசாரணை மேற்கொண்டார். இதனிடையே திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் நீராவி முருகன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி உட்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நீராவி முருகன் (42). களக்காடு அருகே போலீஸாரின் என்கவுன்ட்டரில் நேற்று முன்தினம் இவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். போலீஸார் சுற்றிவளைத்தபோது ரவுடி தாக்கியதில் சப்இன்ஸ் பெக்டர் உட்பட 4 பேர் காயமடை ந்தனர். இச் சம்பவம் தொடர்பாக களக்காடு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக நாங்குநேரி நீதிமன்ற நீதித்துறை நடுவர் ராம்கிஷோர் நேற்று திருநெல்வேலி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா மற்றும் 3 போலீஸாரிடம் தனித் தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார்.
இதனிடையே மருத்துவமனை யில் வைக்கப்பட்டி ருந்த நீராவி முருகனின் உடலை மருத்துவர்கள் செல்வசேகர், பிரசன்னா ஆகியோர் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர். இது முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீராவி முருகனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. வி.எம்.சத்திரத்திலுள்ள தகன மேடையில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.
என்கவுன்ட்டர் நடைபெற்ற பகுதியில் திண்டுக்கல் கூடுதல் எஸ்.பி. லாவண்யா நேற்று விசாரணை நடத்தினார். நீராவி முருகனுக்கு வள்ளியூர், களக்காடு பகுதிகளில் அடைக்கலம் கொடுத்தவர்கள் குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago