சேலம்: சேலத்தில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி, உறவினர்களை அழைத்து தம்பதியர் விருந்து வைத்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
தாங்கள் செல்லமாக வளர்த்து வரும் பெண் நாய்க்குட்டிக்கு, தம்பதியர் வளைகாப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடத்தியதோடு மட்டுமல்லாமல், உறவினர்களை அழைத்து விருந்து வைத்தும் அசத்தியிருக்கிறார்கள்.
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் புகைப்பட கலைஞராக உள்ளார். இவரது மனைவி சுசீலா. இவர்களது வீட்டில் 20 மாதங்களாக "ஹைடி" என்ற ஆண் நாயையும், 9 மாத "சாரா" என்ற பெண் நாயையும் வளர்த்து வந்தனர். சாரா கர்ப்பமடைந்த நிலையில், செல்லமாக வளர்த்து வரும் பெண் நாய் குட்டிக்கு, வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த தம்தியர் முடிவு செய்தனர்.
சொந்த மகளுக்கு வளைகாப்பு வைபோகம் நடத்துவது போன்று, வளைகாப்பு விழாவை கோலாகலமாக நடத்தியுள்ளனர். இதற்காக தனியாக பத்திரிகை அடித்து, உறவினர்களுக்கு நேரில் சென்று வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். நண்பர்கள், உறவினர்கள் புடை சூழ தம்பதியர் செல்ல நாய்களை தனித்தனி இருக்கையில் அமர வைத்து வளைகாப்பு வைபோகத்தை நடத்தியுள்ளனர்.
மஞ்சள் குங்குமமிட்டு சாராவுக்கு வளையல் அணிவித்து, விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு இனிப்பு உள்ளிட்ட ஐந்து வகையான அறுசுவை உணவுகளை பரிமாறினர். சாராவுக்கு வளையல் அணிவித்த சுமார் 30 பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், தாலிக்கயறு, மஞ்சள் குங்குமம் வழங்கினர். இந்த நிகழ்ச்சி, அப்பகுதியில் வெகுவாக கவனத்தை ஈர்த்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago