பெற்றோரை இழந்து உணவுக்கு கூட வழியின்றி தவித்த 3 சிறுவர்கள் - கல்வி செலவை அரசு ஏற்கும் என தி.மலை ஆட்சியர் முருகேஷ் உறுதி

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: ஆவணியாபுரத்தில் பெற்றோரை இழந்து உணவுக்குக் கூட வழிஇன்றி தவித்த 3 சிறுவர்களின் கல்வி செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்கும் என திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த ஆவணியாபுரத்தில் வசித்தவர் லோகநாதன். இவரது மனைவி வேண்டா. இவர்கள் உடல் நலக்குறைவால் உயிர்இழந்துவிட்டனர். இதனால் அவர்களது மகள்கள் கார்த்திகா(15), நிறைமதி(11) மற்றும் மகன் சீரஞ்சிவி(14) ஆகியோர் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பெற்றோரை இழந்ததால் உணவுக்கு கஷ்டப்பட்டனர். அவர்கள் படிக்கும் பள்ளி மதிய உணவு ஒருவேளை பசியாற்றியுள்ளது. மேலும், உறவினர் மற்றும் கிராமமக்களும் உணவு வழங்கி உதவிஉள்ளனர். அவர்கள் வசிக்கும் ஓட்டு வீடும் பழுதடைந்துள்ளது. இச்சூழலில் அவர்களது கல்வியும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது.

இதனால் தடையில்லா கல்வி, வீடு மற்றும் பாதுகாப்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆட்சியர் பா.முருகேஷ் ஆகியோர் உதவிட வேண்டும் என 3 சிறுவர்களும் கோரிக்கை விடுத்தனர். பெற்றோரை இழந்து தவிக்கும் அவர்களது நிலை குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் கடந்த 13-ம் தேதி செய்தி வெளியானது.

இதையடுத்து, 3 சிறுவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பாக, திருவண்ணாமலை ஆட்சியருக்கு தலைமைச் செயலர் வெ. இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, ஆட்சியரின் மேற்பார்வையில், செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ் தலைமையிலான குழுவினர், ஆவணியாபுரத்தில் நேற்று முன்தினம் 3 சிறுவர்களின் நிலை குறித்து விசாரித்தனர். அதில், பெற்றோரை இழந்த மூவரும், உணவு கிடைக்காமல் தவித்து வந்தது உறுதியானது.

இதைத் தொடர்ந்து, அவர்களது கோரிக்கையை கேட்டறிந்த ஆட்சியர் பா.முருகேஷ் கூறியதாவது: பெற்றோரை இழந்த 3 சிறுவர்களுக்கும், குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து ஒவ்வொரு பிள்ளைக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். முதல் மாதத்துக்கான காசோலை அவர்களிடம் வழங்கப்பட்டது. வரும் மாதங்களில் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக நிதி செலுத்தப்படும்.

இவர்களது தாய் வேண்டா உயிரிழந்துள்ளதால், உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இறப்புக்கான நிவாரணத் தொகை ரூ.22,500-ஐ மூத்த மகள் கார்த்திகாவின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் வசிக்கும் வீடு பழுதடைந்துள்ளதால் ஊரக வளர்ச்சித் துறை மூலமாக வீடும் கட்டிக் கொடுக்கப்படும்.

சிறுவர்களின் தாத்தா மறைந்த மாணிக்கம் பெயரில் இரண்டரை சென்ட் இடத்தில் வீடு மற்றும் 1.70 ஏக்கர் நிலம் ஆகியவை மூன்றில் ஒரு பங்காக சிறுவர்களின் பெயரில் பட்டா மாற்றம் செய்து தரப்படும். சொத்துக்கு பாதுகாவலராக அவர்களது அத்தை முத்தாள் இருப்பார்.

இந்தக் கல்வி ஆண்டு வரை அத்தை முத்தாள் பாதுகாப்பில் 3 சிறுவர்களும் படிப்பை தொடர்வர். அடுத்த கல்வி ஆண்டு முதல், சமூக நலத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்படுவர். 3 மாதங்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், கல்வி உபகரணங்கள், புதிய ஆடைகள், காலணி உள்ளிட்டவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, சென்னை சமூக பாதுகாப்புத் துறை ஆணையருக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

3 சிறுவர்களும் விடுதியில் சேர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களது படிப்பு செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்றுகொள்ளும். அவர்கள் நன்றாக படித்து பணிக்கு செல்லும் வரை மாவட்ட நிர்வாகம் துணை நிற்கும்” என்றார். முன்னதாக ஆட்சியர் முருகேஷ் சிறுவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினரும் உதவ முன்வந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்