2 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அனுமதி

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: கரோனா தொற்று பரவல் தொடங்கியபோது 2020 மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால், திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு 2020-ம் ஆண்டு பங்குனி மாதம் முதன்முறையாக தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு மாதமும் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக, கடந்த 2021 நவம்பர் மாதம் கார்த்திகை தீபத்துக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதேநேரத்தில், தீபத்தை தொடர்ந்து வந்த பவுர்ணமி நாளிலும் கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபட்டனர். அதன் பிறகு, கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டாலும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இந்நிலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்டு வந்த தடை உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்லலாம். மார்ச் 17, 18 ஆகிய தேதிகளில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்