கடலூரில் வனத்துறை சார்பில் கடலில் விடப்பட்ட 900 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள்

By செய்திப்பிரிவு

கடலூர் பகுதி கடலில் வனத்துறை சார்பில் 900 ஆமைக் குஞ்சுகள் விடப்பட்டன.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள், கரையோரம் மணல் பகுதிக்கு வந்து முட்டைகள் இட்டுச் செல்லும். ஆமைகள் கரை நோக்கி வரும்போது அவை மீன் பிடி படகுகளில் அடிபட்டும், வலைகளில் சிக்கியும் அதிக அளவில் இறக்க நேருகிறது. இந்த ஆமைகளை பாதுகாக்க தமிழக கடலோர பாதுகாப்புப்படை, வனத்துறை மற்றும் மீன்வளத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடலூரில் வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர் செல்லா வுடன் இணைந்து தேவனாம்பட்டினம், சொத்திக்குப்பம், சித்தரைப் பேட்டை, சாமியார்பேட்டை உள்பட 13 மீனவ கிராம கடற்கரை பகுதியில் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 13 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரித்துள்ளனர். சேகரிக்கப்பட்ட முட்டைகளை அடைகாக்க, கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் முட்டைகள் பாதுகாப்பு பெட்டகம் அமைத்துள்ளனர்.

இந்த நிலையில், அங்கிருந்து 900 குஞ்சுகள் பொறிக்கப்பட்டன. அதனை, நேற்று கடலூர் வன அலுவலர் செல்வம், கடலூர் வன சரக அலுவலர் அப்துல் அமீது ஆகியோர் தலைமையில் கடலில் விடப்பட்டன. இந்நிகழ்வில் கடலூர்டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் கலந்து கொண்டார். வனவர் குணசேனரன், வனஆர்வலர் செல்லா மற்றும் வன பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்