மேலூர் அருகே எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது

மதுரை மேலூர் அருகே மாயாண் டிபட்டியில் எரிவாயு குழாய் பதிக்கும் நிலங்களுக்கு சமமான இழப்பீடு வழங்கக்கோரி போராடிய விவசாயிகளை போலீஸார் கைது செய்து போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்தது.

மதுரை மேலூர் அருகே மாயாண்டிபட்டியில் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

இருபோக சாகுபடி விளை நிலத்தில் ஒரு பகுதி நிலங் களுக்கு ஹெக்டேருக்கு ரூ.94 லட்சம் இழப்பீடும் பக்கத்திலுள்ள விளைநிலங்களுக்கு ரூ.9 லட்சம் இழப்பீடும் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் சமமான இழப்பீடு வழங்கக்கோரி கடந்த 7-ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடந்தது.

மேலூர் கோட்டாட்சியர் பிர் தௌஸ் பாத்திமா பேச்சு வார்த்தை நடத்தும்போது, ஆட்சியருடன் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு ஏற்படுத்தப்படும், அதுவரை குழாய் அமைக்கும் பணி நிறுத்தப்படும் என விவசாயிகளிடம் உறுதி அளித்தார். இந்நிலையில் நேற்று 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒத்தக்கடை போலீஸார் தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதன் பின்னர், மாயாண்டிபட்டியில் காவல்துறை பாதுகாப்புடன் எரிவாயு குழாய் பதிக்கும் பணி கள் நடந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE