தமிழகம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துவிட்டது: பி.தங்கமணி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

நாமக்கல்: ”திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. மாநிலம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து அதிகம் நடக்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மாடகாசம்பட்டியில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: "உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டுச் செல்வதில்லை. ஒரு சில நிர்வாகிகள் வேண்டுமானால் செல்லலாம். அவர்கள் கட்சிக்கு உண்மையானவர்கள் இல்லை. சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்ததும் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவதாக அறவித்தது. ஆனால் இதுவரை வழங்கவில்லை.

மாநிலம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா, சாராயம், லாட்டரி சீட்டு விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நாமக்கல் நகராட்சி புதிய குடிநீர் திட்டம் ரூ.150 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் தாங்கள் கொண்டு வந்த திட்டம் என்கின்றனர். மக்களுக்கான தேவைகளை அறிந்து அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்