பல நாடுகளில் மனநல மருத்துவமனைகள் அதிகம்; இந்தியாவில் மட்டுமே கோயில்கள் அதிகம் - தமிழிசை கருத்து

By கி.பார்த்திபன்

நாமக்கல்: "பல்வேறு நாடுகளில் மனநல மருத்துவமனைகள் அதிகமாக உள்ளன. ஆனால், இந்தியாவில் மட்டுமே கோயில்கள் அதிகமாக உள்ளன" என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கே.புதுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் குலதெய்வக் கோயிலான பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "பல்வேறு நாடுகளில் மனநல மருத்துவமனைகள் அதிகமாக உள்ளன. ஆனால், இந்தியாவில் மட்டுமே கோயில்கள் அதிகமாக உள்ளன. மருத்துவமனைக் காட்டிலும், கோயில்கள் நமக்கு நிம்மதியையும், உற்சாகத்தையும் தருகின்றன. வீடும், நாடும் நல்வழியில் செயல்பட கோயில்கள் உதவுகிறது.

இந்தியா முழுவதும் பாரத பிரதமர் மோடியின் நடவடிக்கையால் 180 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் தற்போது கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, அனைவரும் தைரியமாக நடமாடமுடிகிறது.தற்போது பல்வேறு நாடுகளுக்கும், இந்திய அரசு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது.

பிரதமரின் தீவிர முயற்சியால், உக்ரைனில் சிக்கியிருந்த இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டனர். புதுச்சேரிக்கு வந்த மாணவி ஒருவரை கேட்டபோது மத்திய அரசு எடுத்த முயற்சியை பாராட்டினார்.

புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் 27ம் தேதி, முதல் ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்பட உள்ளன. பெங்களூருக்கும் விமானை சேவை துவக்கப்பட உள்ளன. வரும் ஆண்டுகளில், புதுச்சேரி மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். தற்போது, மாநிலத்தின் முதல் குடிமகளாக உள்ளேன். அந்த மகிழ்ச்சியே எனக்கு போதும். இந்தியாவின், முதல் குடிமகளாக ஆகும் எண்ணம் இல்லை" என்றார்.

அப்போது தமிழக ஆளுநர் ரவியை, மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, "கவர்னரை திரும்பப்பெறும் அதிகாரம் குடியரசுத் தலைவருககு மட்டுமே உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து ஆளுநர்களுமே சிறப்பாகத்தான் பணியாற்றி வருகின்றனர்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்