இளையரசனேந்தல் பிர்கா பிரச்சினை: பழைய அப்பநேரி கிராம மக்கள் திடீர் போராட்டம்

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்காவை தென்காசி மாவட்டத்துடன் இணைக்கக்கோரி அமைச்சர் அளித்துள்ள மனுவை ரத்து செய்ய வலியுறுத்தி பழைய அப்பநேரி கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பிர்கா திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்து வந்தது. ஆனால், சட்டப்பேரவை தொகுதி கோவில்பட்டியிலும், நாடாளுமன்ற தொகுதி சிவகாசியிலும் இருந்தது.

இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் 15.4.2008-ல் அரசாணை வெளியிடப்பட்டு, அதே ஆண்டு மே 1-ம் தேதி இளையரசனேந்தலில் இணைப்பு விழா நடந்தது. மற்ற துறைகள் அனைத்தும் கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், தொடக்க கல்வித்துறை, மின்வாரியம், உள்ளாட்சித்துறை ஆகியவை மட்டும் இணைக்கப்படாமல் இருந்து வருகிறது.

கிராம மக்கள் போராட்டம்

இந்நிலையில், தற்போது சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதி, தென்காசி நாடாளுமன்ற தொகுதி மற்றும் குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்கள் கோவில்பட்டி வட்டத்தில் இருப்பதால் ஏற்படும் சிக்கலைப் போக்க தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டத்தில் இணைக்க வேண்டும் என சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழைய அப்பநேரி கிராம மக்கள் அங்குள்ள அங்கன்வாடி கட்டிடம் முன்பு திரண்டு தலையில் முக்காடு போட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற கூட்டத்துக்கு தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்புக்குழு முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உரிமை மீட்புக் குழு தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு ஊர் நாட்டாமைகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 ஊராட்சிகள் கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர வேண்டும். 12 ஊராட்சிகளையும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் வழங்கிய மனுவை ரத்து செய்து, இளையரசனேந்தல் பிர்கா மக்களின் கோரிக்கையை ஏற்று, வருகிற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் தீர்மானம் நிறைவேற்றி, இணைக்கப்படாத உள்ளாட்சி, தொடக்க கல்வி, மின்சாரத் துறையை கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து ரெங்கநாயகலு கூறும்போது, ‘‘அமைச்சர் கீதாஜீவன் கோவில்பட்டி வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இன்றிலிருந்து 12 வருவாய் கிராமங்களின் உரிமை “எங்க கோவில்பட்டி, எங்க வளர்ச்சி” என்ற கோஷத்தை முழக்கம் செய்ய உள்ளோம்’’, என்றார்.

இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டியில் இணைப்பதற்காக தொடக்கத்தில் இருந்து வழக்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்த முன்னாள் ராணுவ வீரர் அ.ஜெயபிரகாஷ் நாராயணசாமி கூறியதாவது:

கடந்த 19.8.2014-ல் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் கருத்து கேட்பு கூட்ட முடிவின்படி, இளையரசனேந்தல் பிர்காவை திருவேங்கடம் வட்டத்துடன் இணைப்பதால் நிர்வாக காலதாமதம் ஏற்படும் என்பதால், இளையரசனேந்தல் பிர்கா தொடர்ந்து கோவில்பட்டி கோட்டத்துடன் செயல்படலாம் என்று அப்போதை வட்டாட்சியர் அறிக்கை சமர்பித்துள்ளார்.

இதன்படி அப்போதைய சார் ஆட்சியர் விஜய கார்த்திகேயனும் அறிக்கை சமர்பித் தார். அத்துடன் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இளைய ரசனேந்தல் பிர்காவில் உள்ள அனைத்து அரசுத்துறைகளையும் கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்