உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர் நாடு திரும்ப விருப்பம்

By செய்திப்பிரிவு

கோவை துடியலூர் அருகேஉள்ள, சுப்பிரமணியம்பாளையத் தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜான்சி லட்சுமி. இவர்களுக்கு சாய் நிகேஷ் (21), சாய் ரோகித் ஆகிய மகன்கள் உள்ளனர். இதில் சாய் நிகேஷ், கடந்த2018-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில், ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கிறார்.

இச்சூழலில், உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையே, கடந்தமாதம் 24-ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. அங்கு வசிக்கும் இந்திய மாணவர்கள் தங்களது நாடுகளுக்குத் திரும்பி வரு கின்றனர். இதற்கிடையே உக்ரைன் நாட்டில் வசிப்போர் விருப்பம் இருந்தால், உக்ரைன் ராணுவத்தில் இணைந்து பணியாற்றலாம் என அந்த நாட்டு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து சாய்நிகேஷ் உக்ரைன் ராணுவத்தின், ‘ஜார்ஜியன் நேஷனல் லிஜியன்’ என்ற துணை ராணுவப் படையில் கடந்த மாதம் இணைந்தார்.

இத்தகவலை அறிந்த கோவையில் வசிக்கும் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் இந்திய ராணுவத்தி்ல் சேர விரும்பிய சாய்நிகேஷ், போதிய உயரம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டார். இதனால் கல்லூரி படிப்புக்காக உக்ரைன் சென்றிருந்த சமயத்தில், பின் விளைவுகள் அறியாமல் அவர்உக்ரைன் ராணுவத்தில் இணைந்தார் என கோவையில் உள்ள அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த சாய்நிகேஷை, அதை கைவிட்டு மீண்டும் கோவைக்குத் திரும்பி வரும்படி அவரது பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். முதலில் அவர் மறுத்துவிட்டார். பின்னர், பெற்றோர் தங்களது உடல்நிலை காரணங்களைக் கூறி வலியுறுத்தியதால், சாய்நிகேஷ் உக்ரைன்ராணுவத்தில் இருந்து விலகி இந்தியாவுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், சாய்நிகேஷ் நாடு திரும்ப உள்ள தகவல் உளவுத் துறை அதிகாரிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சாய்நிகேஷின் தந்தை ரவிச்சந்திரனிடம் கேட்ட போது, ‘‘மகனை மீட்டுத் தர அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். மகன் நல்லபடியாக வர வேண் டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்