அதிமுக பிரமுகர் வீட்டில் நகை, பணம் கொள்ளை - குற்றவாளிகளை பிடித்த தனிப்படைக்கு ஆவடி காவல் ஆணையர் பாராட்டு

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ததற்காக, தனிப்படையினரை ஆவடி காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.

திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். அதிமுக பிரமுகரான இவர் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரராகவும் உள்ளார்.

கடந்த 1-ம் தேதி அதிகாலையில் இவரது வீட்டுக்கு சொகுசு காரில் வந்த ஒரு பெண் உட்பட 7 பேர் தங்களை வருமானவரித் துறை அதிகாரிகள் என கூறிக் கொண்டு, வீட்டிலிருந்த 117 பவுன் நகை,ரூ.2.25 லட்சம் பணம், சொத்து ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து, பாலமுருகன் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் உத்தரவின் பேரில், பூந்தமல்லி உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையில் அமைக்கப்பட்ட 5 தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில், இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக 12 பேரைக் கைது செய்தனர். அத்துடன், நகை மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

குறுகிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து, நகை மற்றும் பணத்தை மீட்டதற்காக தனிப்படையினரை ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

வருமானவரித் துறை அதிகாரிகள் என கூறிக் கொண்டு, வீட்டிலிருந்த 117 பவுன் நகை, ரூ.2.25 லட்சம் பணம், சொத்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்