மதுரை: திருமங்கலம் அருகே உள்ள பெரிய வாகைக்குளம் கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நாடக மேடை திறப்பு விழா நடந்தது. இதை ஆர்பி.உதயகுமார் திறந்து வைத்து பேசியதாவது: திருமங்கலம் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. முன்னுரிமை வழங்கி அடிப்படை வசதிகளை நிறைவேற்றியதால் கடந்த ஆண்டு இந்தியாவிலேயே சிறந்த ஊராட்சியாக திருமங்கலம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளது.
திருமங்கலம் தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்று முதியோர் உதவித் தொகை வழங்கியுள்ளோம். இன்று நிறைய கிராமங்களில் முதியோர் உதவித் தொகையை வழங்காமல் நிறுத்தப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆட்சியரிடம் முறையிட்டும் தீர்வு இல்லை. தற்போது தரமற்ற ரேஷன் அரிசி வழங்குகிறார்கள். அதை தரமுள்ள அரிசியாக வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு முதியோர் உதவித் தொகை கிடைக்கவும், ரேஷன் கடைகளில் தரமான அரிசி கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago