நாமக்கல்: கொல்லிமலைக்குச் செல்லும் பாதையில் 2 மற்றும் 9-வது கொண்டை ஊசி வளைவு வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறையினர் பல மணி நேரம் போராடி அணைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கோடைகாலத்தில் தீத்தடுப்புப் பணிகள் மேற்கொள்வது வழக்கம். வனத்துறையினர் இப்பணிகளை மேற்கொள்வர். இந்தாண்டுக்கான பணி வரும் வாரங்களில் வனத்துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் மலைக்குச் செல்லும் பாதையில் 2 மற்றும் 9-வது கொண்டைஊசி வளைவுகளில் சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அப்பகுதி முழுவதும் பரவியது.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கோடையின் தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். அதேவேளையில் விபத்துக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago