நாமக்கல்: திருச்செங்கோட்டில் மாணவி ஒருவர் பள்ளி வளாக கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் இன்று (மார்ச் 12) மதியம் 2.30 மணியளவில் வாந்தி வருவதாக கூறி வகுப்பறையில் இருந்து வெளியேறியதாகவும், பின்னர் அவர் பள்ளியின் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த மாணவியை பள்ளி ஆசிரியர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago