புதிதாக தேர்வான மேயர்களுக்கு ‘கடிவாளமா’? - அரசு சார்பில் உதவியாளர்களை நியமிக்க திட்டம்

By செய்திப்பிரிவு

மதுரை: சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 இடங்களில் திமுகவினர் மேயர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கும்பகோணத்தில் மட்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மேயராக உள்ளார். இவர்களில் 11 பெண்கள் மேயர்களாக உள்ளனர்.

மேயர்களுக்கு கடந்த காலங்களில் மாநகராட்சி சார்பில் ஒருநேர்முக உதவியாளர், உதவியாளர், ஓட்டுநர், டபேதார் ஆகியோர் நியமிக்கப்படுவது வழக்கம். தற்போதும் புதிதாக தேர்வான அனைத்து மேயர்களுக்கும் பணியாளர்கள் மாநகராட்சி சார்பில் நியமிக்கப்பட்டுவிட்டனர்.

நேர்முக உதவியாளர் மேயர்களுக்கு வரும் கோப்புகளை படித்து சிறு குறிப்பாகத் தொகுத்துமேயருக்கு வழங்குவார். மேலும்அதில்ஏ ற்படும் சந்தேகங்களை விளக்குவார். இந்நிலையில் தமிழகஅரசு சார்பிலும் மற்றொரு நேர்முக உதவியாளரை நியமிக்கும் திட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மேயருக்கு மாநகராட்சி சார்பில் நேர்முக உதவியாளர் நியமித்துவிட்டோம். தமிழக அரசே நேரடியாக நேர்முக உதவியாளர்களை நியமிப்பது பற்றி இதுவரை எங்களுக்கு தகவல் இல்லை என்றனர்.

ஆனால், மேயர் தரப்பிலோ அரசு சார்பிலும் நேர்முக உதவியாளர் நியமிக்கப்படுவது பற்றிஆலோசனை நடப்பது உண்மைதான் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்