கரோனா பரவல் காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் பயணிகள் (பாசஞ்சர்) ரயில்கள் நிறுத்தப்பட்டன. கரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் இந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்ட நிலையில், அவை உரிய நேரத்தில் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த ரயில் பயணிகள் சிலர் கூறியதாவது: கோவை - சேலம், சேலம் - கோவை,பாலக்காடு - திருச்சி, திருச்சி - பாலக்காடு, கோவை - நாகர்கோவில், நாகர்கோவில் - கோவை ஆகிய பயணிகள் ரயில்கள், திருப்பூர் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பருவக்கட்டணம் (சீசன் டிக்கெட்) அடிப்படையில் பெரும்பாலானோர் பயணிகள் ரயிலில் வேலைக்கு சென்று வருவது வாடிக்கை. கரோனா ஊரடங்குக்கு பின் இயக்கப்படும் பயணிகள் ரயில் உரிய நேரத்தில் இயக்கப்படவில்லை. அதாவது காலையில் 9.15 மணிக்கு இயக்கப்படும் கோவை- சேலம் ரயில் நிறுத்தப்பட்டு பலமாதங்களாகியும், இதுவரை இயக்கப்படவில்லை. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள்பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல காலை 7.15 மணிக்குஇயக்கப்பட்ட கோவை-நாகர்கோவில் ரயில், தற்போது 8 மணிக்குஇயக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பாலக்காடு- திருச்சி ரயில் இயக்கப்படுகிறது. இவ்விரு ரயில்களும், கரோனா ஊரடங்குக்கு முன்பு இருகூர் ரயில் நிலையத்தில் காலை மற்றும்மாலை வேளைகளில் நின்று சென்றன. தற்போது நிறுத்தப்படாததால் பயணிகள் அவதியடைந்துவருகின்றனர். அதேபோல சிங்காநல்லூர் நிறுத்தத்தில் நாகர்கோவில் ரயில் நிறுத்தப்படுவதில்லை.
மாலை 7.15 மணிக்கு திருப்பூருக்கு வந்து கொண்டிருந்த நாகர்கோவில் ரயில், தற்போது5.15 மணிக்கு வருவதாலும், அடுத்த சில நிமிடங்களில் பாலக்காடு ரயில் வந்துவிடுவதாலும், பலரும்அவதியடைகின்றனர். ரயில்கள்உரிய நேரத்தில் இயக்கப்படாததால், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரயில் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். ஏற்கெனவே இயக்கி வந்த நேரத்திலேயே ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மைக்கேல்கூறும்போது, ‘‘கரோனா தடுப்பு விதிமுறை காரணமாகவே பயணிகள் ரயில்கள், சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்கின்றன. ரயில்கள் இயக்கப்படும் நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பான கோரிக்கையை அதிகாரிகளுக்கு அனுப்பிஉள்ளோம். கோவை- சேலம் ரயில்மீண்டும் இயக்கப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago