கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத் துடன் தொடங்கியது. இந்தியாவைச் சேர்ந்த 76 பேரும், இலங்கையைச் சேர்ந்த 88 பேரும் பங்கேற்றனர்.
பாக் ஜலசந்தி கடல் பகுதியில் 285 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கச்சத்தீவு, ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் உள்ளது. ராமேசுவரத்திலிருந்து இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம்.
இங்கு 1913-ம் ஆண்டு புனித அந்தோணியார் ஆலயம் அமைக் கப்பட்டது. ஆண்டுதோறும் கிறிஸ் தவர்களின் தவக்காலத்தில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறும். இதில் இந்தியா, இலங்கையை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வர்.
இந்த ஆண்டுக்கான விழா, நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெடுந்தீவு பங்குத் தந்தை வசந்தம் கொடியை ஏற்றி வைத்தார். இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜெபரத்தினம், ராமேசுவரம் பங்குத் தந்தை தேவ சகாயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக கச்சத்தீவு திரு விழாவில் கலந்து கொள்ள ராமேசு வரம் மீன்பிடி இறங்குதளத்தி லிருந்து புறப்பட்ட பயணிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு அடையாள அட் டைகள், மீன்வளத் துறையின் சார்பாக லைப் ஜாக்கெட் வழங் கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் வருவாய், காவல் துறை, சுங்கத்துறை அதி காரிகள் ஆகியோர் பயணிகளை சோதனையிட்டனர். 3 விசைப் படகுகளில் 2 பெண்கள் உட்பட 64 பேரும், ஒரு நாட்டுப்படகில் 12 பேர் என மொத்தம் 76 பயணிகள் கச்சத்தீவுக்குச் சென்றனர். இலங் கையிலிருந்து 88 பேர் கச்சத்தீவுக்கு வந்திருந்தனர்.
கச்சத்தீவு செல்லும் இந்தி யர்களின் பாதுகாப்புக்காக இந்திய கடற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள், கடலோர காவல்படையைச் சேர்ந்த படகுகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று (மார்ச் 12) காலை யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜெபரத்தினம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. திருப்பலி முடிவடைந்த பின்பு கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற இருந்த கச்சத்தீவு திரு விழாவை கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இலங்கை அரசு ரத்து செய்திருந்தது குறிப் பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago