மதுரை சித்திரைத் திருவிழாவில் விவரங்கள் குறித்த கால அட்டவணையை மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 16-ம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழாவுக்கான கால அட்ட வணையை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை நேற்று வெளியிட்டார்.
சித்திரை திருவிழாவில் 12 நாட்களும் அம்மன் சுவாமி பல்வகை வாகனங்களில் எழுந் தருளி திருவீதி உலா வருவர். இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக எட்டாம் நாள் 12-ம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அன்று மீனாட்சியம்மன் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். பத்தாம் நாள் திருவிழாவான 14-ம் தேதி அன்று மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். 15-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. நான்கு மாசி வீதிகளில் சுவாமிகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப் பார்கள். மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா 16-ம் தேதி நிறைவடையும் நிலையில், தொடர்ந்து அழகர் கோவில் கள்ளழகர் கோயில் சார்பில் 15-ம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நடக்கிறது.
தொடர்ந்து 16-ம் தேதி சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago