தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக 16.3 சதவீதம் வருமான வரி வசூலித்து வருமான வரித்துறை சாதனை படைத்துள்ளது.
ஆண்டுதோறும் வருமான வரியை செலுத்துவதற்கான இறுதி நாள் மார்ச் 31-ம் தேதியாகும். ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைவிட கூடுதலாக வருமான வரி வசூல் செய்ய இலக்கு நிர்ண யிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில வருமான வரி அலுவலகங்களுக்கும் இவ் வாறு இலக்கு நிர்ணயிக்கப்படு கிறது. இதன்படி, 2015-16ம் நிதி யாண்டில், தமிழகத்தில் நிர்ணயிக் கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக 16.3 சதவீதம் வருமான வரி வசூல் செய்து வருமான வரித்துறை சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது:
வருமான வரி வசூலை ஆண்டு தோறும் அதிகரிக்க பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக, ஆண்டு தோறும் முந்தைய ஆண்டு வசூலான தொகையைவிட கூடுத லாக 15 சதவீதம் அதிகரித்து அடுத்த ஆண்டுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
2014-15ம் ஆண்டு ரூ.51 ஆயிரத்து 777 கோடிக்கு வருமான வரி வசூல் இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. தமிழகத்தில் இந்த இலக்கைத் தாண்டி வருமான வரித் துறை ரூ.52 ஆயிரம் கோடி வருமான வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
வருமான வரி செலுத்துவது பற்றிய விழிப்புணர்வு பொது மக்களிடம் அதிகரித்திருப்பதே இதற்கு முக்கியக் காரணம். முறை யாக வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை உணர்ந்து, அதை தவிர்க்கவே பலரும் தாமாக முன்வந்து வரி செலுத்தத் தொடங்கியுள்ளனர். அத்துடன், வருமான வரித்துறையின் மதிப்பீட்டு அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து வருமான வரி வசூல் செய்வதற்காக மேற்கொண்டு வரும் சீரிய முயற்சி, சொத்து பரிமாற்றத்துக்கான மூலதன ஆதாய வரி செலுத்துவது அதிகரித்திருப்பது ஆகியவையும் வருமான வரி வசூல் உயர காரணமாக அமைந்துள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
6 hours ago