வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி: ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ.6-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு காய்கறிச் சந்தைக்கு வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை கிலோ ரூ.6-க்கு விற்பனையானது

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும், நேதாஜி காய்கறிச் சந்தைக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓமலூர் மற்றும் கர்நாடகாவில் இருந்தும் நாள்தோறும் தக்காளி விற்பனைக்காக வருகிறது. இரு மாதங்களுக்கு முன்னர், தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்ததால், கிலோ ரூ.120 வரை விற்பனையானது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தக்காளி விளைச்சல் அதிகரிப்பால், காய்கறிச்சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.

ஈரோடு நேதாஜி காய்கறிச் சந்தைக்கு நேற்று 6000 பெட்டி தக்காளி வரத்தானது. 30 கிலோ எடைகொண்ட பெட்டி ரூ.130 முதல் 150 வரை விலை போனது. சில்லறைச் சந்தையில் தக்காளி கிலோ ரூ.6-க்கு விற்பனையானது. வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை வீழ்ச்சி தொடரும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்