கிருஷ்ணகிரியில் ஆண்டுக்கு 9,000 டன் மீன் உற்பத்தி செய்யலாம்: மீன்வளத்துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆண்டிற்கு ரூ.9 ஆயிரம் டன் மீன்கள் உற்பத்தி செய்யலாம் என மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாசன குளங்களில் ரூ.3 கோடியே 12 லட்சம் மதிப்பில் மிதவை கூண்டில் மீன் வளர்ப்பு திட்ட பணிகளை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர். கே.எஸ்.பழனிசாமி, ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து 60 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கிருஷ்ணகிரி அணை பகுதியில் மீன் குஞ்சுகள் உற்பத்தி பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், கூறியதாவது:

பாசன குளங்களில் மிதவை கூண்டில் மீன்வளர்ப்பு திட்டத் தின் மூலம் 52 மீனவ கூட்டுறவு சங்கத்தினர் நேரடியாக பயன்பெறுகின்றனர்.

மேலும், ஆண்டுக்கு 200 டன் மீன்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மீன் தீவனம், மீன் குஞ்சுகள் ஆகியவற்றை 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இம்மீன் வளர்ப்பு மூலம் மொத்த வருவாய் ஆண்டுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் வருவாய் ஈட்டும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் வருவாயில் அரசுக்கு 50 சதவீதமும், பயனாளிக்கு 50 சதவீதமும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் மழைக்காலங் களில் 5 நீர்த்தேக்கம், 876 ஏரிகள் என மொத்தம் 9 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நீர்நிலைகளில் ஆண்டுக்கு 9 ஆயிரம் டன் மீன் உற்பத்தி செய்ய முடியும். ஆகவே, மீனவர்கள், மீன் வளர்க்கும் விவசாயிகள் அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளை பயன்படுத்தி மீன் உற்பத்தியில் ஈடுபட வேண்டும், என்றார்.

இந்நிகழ்வுகளில் கோட்டாட்சியர் (பொ) பாலகுரு, முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், வட்டாட்சி யர்கள் இளங்கோ, சரவணன், திமுக நிர்வாகிகள் ரஜினிசெல்வம், கேவிஎஸ் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்