நான்கு வழிச்சாலை பணிகளுக்காக புதுச்சேரி எல்லை மதகடிப்பட்டில் அமைக்கப்பட்டிருந்த அடையாள அலங்கார வளைவு மற்றும் காமராஜர் சதுக்கம் ஆகியவை இடிக்கப்பட்டன.
புதுச்சேரி - விழுப்புரம் இடையேபோக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச் சூழலில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக கண்டமங்கலம், திருபு வனை, திருபுவனை பாளையம், அரியூர், திருவண்டார்கோவில், மதகடிப்பட்டு, கெங்கராம்பாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் கடை கள், வீடுகள் இடிக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மழைநீர்செல்லும் வகையில் சாலை யின் குறுக்கே பல்வேறு இடங்களில் சிறிய பாலங்களும் அமைக் கப்படுகின்றன.
மேலும் திருபுவனை, திருவண்டார் கோவில் ஆகிய பகுதிகளில் கிராமப்புற சாலைகளைஇணைக்கும் வகையில் 2 மேம் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இ்ச்சூழலில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக புதுச் சேரி எல்லை மதகடிப்பட்டில் உள்ளஅடையாள அலங்கார வளைவு மற்றும் காமராஜர் சதுக்கம் ஆகியவை நேற்று இடிக்கப்பட்டன.
இதுபற்றி நெடுஞ்சாலை துறைஅதிகாரிகள் கூறுகையில், “நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக இவை கள் இடிக்கப்பட்டுள்ளன. பணிகள் நிறைவடைந்த பின்னர் புதிய வளைவு, புதிய சதுக்கம் அமைக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago