சோனியா புகைப்படத்தை பயன்படுத்தி அவதூறு பரப்புவதை தடுக்க நடவடிக்கை: உசிலம்பட்டி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சோனியாகாந்தி புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு கருத்துகளை நீக்க, உசிலம்பட்டி போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உசிலம்பட்டியைச் சேர்ந்த காந்தி சரவணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் புகைப்படத்தை பயன் படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரப்பப்படு கின்றன.

இதை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தேன். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் சோனியாகாந்தி மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்புவது தொடர்கிறது. எனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் சோனியா காந்தி தொடர்பான அவதூறு பதிவுகளை உடனடியாக நீக்கவும், இதை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.

இதை நீதிபதி இளந்திரையன் விசாரித்து, இது தொடர்பாக உசிலம் பட்டி காவல் ஆய்வாளர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE