மேலூரில் உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு அரசு பள்ளியில் சமையலர் பணி

By செய்திப்பிரிவு

மேலூரில் கடத்திச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு அரசு பள்ளியில் சமையலர் பணி வழங்கப்பட்டது.

மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி கடந்த 6-ம் தேதி திடீரென உயிரிழந்தார். அவரை கடத்தியதாக நாகூர் ஹனிபா, அவரது தாயார் மதினாபேகம் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த கடத்தல் வழக்கு பின்னர் கொலை வழக்காக மாற் றப்பட்டது.

இதற்கிடையே சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப் பதாகக் கூறி பெற்றோர், மூமுக, பாஜகவினர் மேலூர் அருகே சாலை மறியல் செய்தனர்.

சிறுமியின் குடும்பத்துக்கு அமைச்சர் பி.மூர்த்தி தனது சொந்த பணத்தில் ரூ.5 லட்சம் வழங்கினார். சிறுமியின் குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்து முன்னணி, பாஜகவினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் சிறுமியின் தாயா ருக்கு மேலவளவு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சமையலர் பணி வழங்கி மதுரை மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவிட்டார்.

இப்பணி நியமன ஆணையை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வரலெட்சுமி, மேலூர் வட்டாட்சியர் இளமுருகன் ஆகி யோர் சிறுமியின் தாயாரிடம் வழங் கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்