புது டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 9) விசாரணைக்கு வந்தது.
அப்போது பேரறிவாளன் தரப்பில், கடந்த 30 ஆண்டு காலமாக பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறார். இதுவரை மூன்று முறை பரோலில் வெளியே வந்துள்ள அவர், சிறை நடத்தை விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்து உள்ளார். அவர்மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது மத்திய அரசு தரப்பில், ஏற்கெனவே அரசுத் தரப்பில் பேரறிவாளனுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு ஜாமீன் வழங்க கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago