காரைக்கால் கைலாசநாதர் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்

By வீ.தமிழன்பன்

காரைக்கால்: காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற சுந்தராம்பிகை சமேத கைலாசநாதர் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் இன்று (மார்ச் 9) காலை நடைபெற்றது.இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி காலை பஞ்சமூர்த்திகள், அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனைக் காட்டப்பட்டது. தொடர்ந்து கொடி பெரிய வீதியுலா நடைபெற்றது. கொடிக்கம்பத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனைக் காட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், கைலாசநாதசுவாமி நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் குழுத் தலைவர் ஆர்.ஏ.ஆர்.கேசவன், துணைத்தலைவர் பி.ஏ.டி.ஆறுமுகம், செயலாளர் எம்.பக்கிரிசாமி, பொருளாளர் டி.ரஞ்சன் கார்த்திக்கேயன், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மார்ச் 17-ம் தேதி தேரோட்டம், 20-ம் தேதி தொப்போற்சவம், 21-ம் தேதி காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா உள்ளிட்டநிகழ்வுகள் நடைபெறுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE