பொள்ளாச்சி: மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்திய விவசாயிக்கு ரூ.3.70 லட்சம் அபராதம்

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தி, ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்திய விவசாயிக்கு ரூ.3.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, "பொள்ளாச்சியை அடுத்த ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வகுமார சாமி, தன்னுடைய விவசாய நிலத்திலுள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க பெறப்பட்ட மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தி, ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருவதாக மின்வாரிய புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை மின்வாரிய புலனாய்வு பிரிவில் இருந்து உதவி செயற்பொறியாளர் தலைமையில் வந்த சிறப்புக் குழுவினர், ஆத்துப்பொள்ளாச்சியில் உள்ள செல்வகுமாரசாமியின் விவசாயத் தோட்டத்தில் ஆய்வு நடத்தினர். இதில், விவசாயப் பயன்பாட்டுக்காக கிணற்றில் மின்மோட்டார் மூலமாக தண்ணீர் எடுக்க பெற்ற மின் இணைப்பை, கடந்த ஓராண்டாக முறைகேடாக பயன்படுத்தி, அருகில் உள்ள ஆழியாறு ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பது தெரியவந்தது. இதையடுத்து, விவசாயி செல்வகுமாரசாமிக்கு ரூ.3.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

விவசாயத்துக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தி, ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்