கோவையில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பித்து 3 ஆண்டுகளாக காத்திருக்கும் பயனாளிகள்

By செய்திப்பிரிவு

கோவை மாவட்டத்தில் தாலிக்கு தங்கம், உதவித் தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், 3 ஆண்டுகளாக 10,500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் காத்திருப்பில் உள்ளனர்.

தமிழக அரசின் சமூக நலத்துறையின் சார்பில் திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏழைப் பெண்களுக்கு பயன் அளிக்கும் இத்திட்டத்தின் கீழ், பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் தொகை, 8 கிராம் தங்கம், 10-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் தொகை, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

முன்பு இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பிப்பவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், சில வருடங்களாக இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு உதவித் தொகை கிடைப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து, சமூக செயற்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘திருமணத்துக்கு 40 நாட்களுக்கு முன்பே இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, ஏராளமான பெண்கள், திருமணத்துக்கு முன்பே விண்ணப்பிக்கின்றனர். ஆனால், விண்ணப்பிப்பவர்களுக்கு உதவித்தொகை குறிப்பிட்ட நாட்களுக்குள் கிடைப்பதில்லை. திருமணத்துக்கு விண்ணப்பித்தால், திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகே தொகை கிடைக்கும் நிலைமை உள்ளது.

தற்போதைய சூழலில், மாவட்டத்தில் கடந்த 2019-20, 2020-21, 2021-22 ஆகிய மூன்று ஆண்டுகளில் பெறப்பட்ட 10,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. தாமதமாக கிடைக்கும் உதவித்தொகையால், இத்திட்டத்தின் நோக்கமே வீணாகிறது. விண்ணப்பித்தவர்களுக்கு விரைவாக உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

சமூக நலத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாதத்துக்கு சராசரியாக 300 பேர் இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.

இந்த விவரம் அரசுக்கு முறையாக குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை தெரிவிக்கப்படுகிறது. அரசு அனுமதி அளித்தவுடன், நிகழ்ச்சி நடத்தி உதவித்தொகை, தங்கம் ஆகியவை வழங்கப்பட்டு விடுகிறது. நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு உதவித்தொகை, தங்கம் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்