மதுரை: கருப்பு பட்டை அணிந்த கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்கள்

மதுரை மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு தடையின்மை சான்று வழங்காத மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரை கண்டித்து நேற்று நடந்த சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுசரித்து ஆசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர்.

மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 3 மாவட்டங்களிலுள்ள அனைத்து கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளிலும் வெளி மாவட்ட பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள், தங்களது சொந்த மாவட் டத்துக்கு பணி மாறுதலில் செல் வதற்கு தடையின்மைச் சான்று அவசியம்.

இதனை வழங்காத மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரை கண்டித்து கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளின் ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மகளிர் தினத்தை துக்க தினமாக அனுசரித்து கருப்பு பட்டை அணிந்து ஆசிரியர்கள் பணியாற்றினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE